February 22, 2025
தேசியம்
செய்திகள்

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

கடுமையான சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தை விரைவாக எட்ட வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.

கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கு நேற்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்ததாக பிரதமர் கூறினார்.

ஆனால் பொது சேவை கூட்டணி அதற்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை என Justin Trudeau தெரிவித்தார்.

கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற உரிமை உள்ளது எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment