பிரதமர் Justin Trudeauவின் Jamaica விடுமுறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பயணம் கனடியார்களுக்கு 160 ஆயிரம் டொலர்கள் செலவை ஏற்படுத்தியுள்ளது என தெரியவருகிறது.
ஆனாலும் இந்த செலவுகள் நியாயமானவை என Liberal அரசாங்க சபை தலைவர் Mark Holland நியாயப்படுத்தினார்.
இவற்றில் பெரும்பாலான செலவுகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பானவை என அவர் கூறினார்.
இந்த பயணம் மத்திய நெறிமுறைகள் ஆணையரினால் முன்கூட்டியே ஏற்றுக்கொள்ளப்பட்டது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
ஆனாலும் இந்த பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (18) நாடாளுமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பினர்.