சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கனடா மூடியுள்ளது.
மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.
சூடானுக்கு பயண ஆலோசனையை ஞாயிற்றுக்கிழமை (16) கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.
சூடானுக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அந்த பயண ஆலோசனை அறிவுறுத்துகிறது.
சூடானில் ஏற்கனவே உள்ள கனடியர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.
சூடானில் கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 185 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.