தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

கனடாவில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து 2021ஆம் ஆண்டு முதல் பிரதமர் Justin Trudeau குறைந்தது ஐந்து முறையான விளக்கங்களைப் பெற்றுள்ளார்.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை ஆலோசகர் Jody Thomas இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இந்த விளக்கம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுவுடன் வெள்ளிக்கிழமை (14) பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆவணங்களில் இந்த தகவல் வெளியானது.

கனடிய தேர்தலில் சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து 2022இல் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது சாத்தியம் என பிரதமரின் தலைமை அதிகாரி Katie Telford நாடாளுமன்றக் குழுவின் முன்னர் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan

Manitoba பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது!

Gaya Raja

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment