தேசியம்
செய்திகள்

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம்

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் வியாழக்கிழமை (13) மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

வியாழன் காலை 8:55 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கம் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் சுனாமி அபாயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

British Colombia மாகாணத்தில் இந்த வாரம் “சுனாமி தயார்நிலை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டது.

சுனாமி ஏற்பட்டால் தயார் நிலையில் இருக்குமாறு பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வாரம் முழுவதும் மாகாணம் மக்களை ஊக்குவிக்கிறது.

Related posts

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan

Ontario தேர்தல்: கட்சி தலைவர்கள் நேரடி விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment