2.6 மில்லியன் டொலர் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் Montrealலில் மீட்கப்பட்டன.
கனடா எல்லை சேவைகள் நிறுவனம், Montreal துறைமுக ஆணையத்துடன் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் இந்த வாகனங்களை காவல்துறையினர் மீட்டனர்.
Montreal துறைமுகத்தில் இருந்து 53 சொகுசு வாகனங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாகனங்கள் சரக்கு கப்பல் கொள்கலன்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட காத்திருந்த வேளையில் மீட்கப்பட்டன.
800 ஆயிரம் டொலர் மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்த ஒரு மாதத்திற்குள் இன்றைய அறிவிப்பு வெளியானது.
இந்த ஆண்டு மாத்திரம் திருடப்பட்ட 252 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக Montreal காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.