வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதிகள் கனடிய அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மீன்வளம், பெருங்கடல்கள் அமைச்சின் ஒரு ஊழியரின் பாதுகாப்பு அனுமதி 2017ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டது.
இவர் உளவு பார்த்தல் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பாக செயல்படுதல் போன்ற குற்ற சாட்டுகள் அடிப்படையில் இந்த நகர்வை அமைச்சு முன்னெடுத்தது.
2019ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு, சமூக மேம்பாட்டு அமைச்சின் ஒரு ஊழியரின் பாதுகாப்பு அனுமதியும் இரத்து செய்யப்பட்டது
இவர் உளவு பார்த்தல் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பாக செயல்படுதல் போன்ற குற்ற சாட்டுகளின் அடிப்படையில் பாதுகாப்பு அனுமதி இரத்து செய்யப்பட்டது.
அதேவேளை கனடிய எல்லை சேவைகள் நிறுவனம் 2019ஆம் ஆண்டில் ஒரு ஊழியரின் பாதுகாப்பு அனுமதியை இரத்து செய்தது
இவர் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு தகவல்களை வழங்கியதன் மூலம் அவர்களுக்கு சார்பாக செயல்பட்டதான குற்ற சாட்டின் அடிப்படையில் அவரது பாதுகாப்பு அனுமதி இரத்து செய்யப்பட்டது.
இந்த மூன்று சம்பவங்களில் தமது முடிவு குறித்த மேலதிக விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை