Ontario, Quebec மாகாணங்களில் தொடர்ந்து வீசும் புயல், கடும் உறைபனி மழை காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
இதில் Quebec மாகாணத்தின் Montreal பகுதி பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
புதன்கிழமை (05) மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 780,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக Hydro-Québec தெரிவித்துள்ளது.
Montrealலில், 316,000 அதிகமான Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
Ontarioவில் புதன்கிழமை மாலை 6 மணி வரை 120,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக Hydro One தெரிவித்தது.
இதில் பெரும்பாலான பாதிப்பு மத்திய Ontarioவில் பதிவாகியது.
இந்த பகுதியில் புதன்கிழமை இரவுக்குள் 50 மில்லி மீட்டர் மழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.
பனிக்கட்டிகளின் பாரம் காரணமாக மரங்கள் விழுந்து கிளைகள் முறிவடைவதால் மின்தடை ஏற்படுவதாக Hydro-Québec தெரிவித்துள்ளது.
Quebecகில் மீண்டும் மின் இணைப்புகளை வழங்கும் முயற்சியில் 500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும் புயல் தொடரும் நிலையில் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடு எதுவும் வெளியாகவில்லை.
தெற்கு Quebecகின் பெரும் பகுதிக்கு உறைபனி மழை எச்சரிக்கை சுற்றுச்சூழல் கனடாவினால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் 10 முதல் 20 சென்டி மீட்டர் வரை உறைபனி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிற்பகல் 2 மணி வரை 16 மில்லி மீட்டர் உறைபனி மழை Montrealலில் மாத்திரம் பதிவாகியுள்ளது.
Montreal Pierre Elliott Trudeau விமான நிலையத்தில் புதன்கிழமை 110க்கும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
Ontarioவின் வடக்குப் பகுதி குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
வடக்கு Ontarioவில் வியாழக்கிழமை (06) காலைக்குள் 15 முதல் and 25 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.