தேசியம்
செய்திகள்

NATOவில் பின்லாந்து இணைவுக்கு கனடா வாழ்த்து

NATOவில் பின்லாந்து இணைந்து கொண்டதற்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் Justin Trudeau அலுவலகம் செவ்வாய்க்கிழமை (04) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த இணைவு NATO உறுப்பினர் கூட்டணியை பலப்படுத்துகிறது என அந்த அறிக்கையில் பிரதமர் கூறினார்.

அதேவேளை NATOவில் இணைவதற்கான சுவீடனின் விண்ணப்பத்தை தாமதமின்றி அங்கீகரிக்குமாறு Justin Trudeau ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்

இந்த நிலையில் NATOவில் பின்லாந்து இணைவது ரஷ்யாவிற்கு பெரும் நெருக்கடியாகும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்

இதன் காரணமாக இந்த தினத்தை “முக்கியமான ஒரு நாள்’ என அவர் குறிப்பிட்டார்

பல ஆண்டுகளாக NATO சந்தித்த பெரும் சவால்களை எதிர்கொள்ள இந்த இணைவு அனுமதித்துள்ளது என அமைச்சர் Melanie Joly நம்பிக்கை தெரிவித்தார்.

NATOவில் சுவீடன் இணைவதற்கு கனடாவின் ஆதரவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை சுவீடன் வெளிவிவகார அமைச்சரை கனடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கான ஆதரவு குறித்து இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டும் என மீண்டும் அழைப்பு

Lankathas Pathmanathan

March 2020 முதல் August 2022 வரை 42 ஆயிரத்திற்கும் அதிகமான COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு நான்கு டாங்கிகளை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment