தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம்: Conservative தலைவர்

Liberal அரசாங்கத்தின் 2023 வரவு செலவு திட்டத்தை பிரதமர் Justin Trudeau ஆதரிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்கள் அதனை தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்கிழமை (28) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கனடியர்கள், வணிகங்கள் மீதான இந்த வரவு செலவு திட்டத்தின் தாக்கத்தை Conservative, NDP கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

தனது கட்சி இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

ஆனாலும் வரவு செலவு திட்டத்தின் சில பகுதிகளால் ஏமாற்றம் அடைந்தாலும் புதிய ஜனநாயகக் கட்சி இதனை ஆதரித்து வாக்களிக்கும் என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்

NDPயின் ஆதரவுடன் இந்த வரவு செலவு திட்டம் வாக்களிப்பின் போது நிறைவேற்றப்படும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

Lankathas Pathmanathan

குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்

Lankathas Pathmanathan

அமெரிக்கவுடன் நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் கனடாவிடம் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment