2023 வரவு செலவுத் திட்டம் அரசாங்கத் துறைகளுக்கான 3 சதவீத செலவினங்களைக் குறைக்க முன்மொழிகிறது
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான அரசாங்க செலவினங்களை மிச்சப்படுத்தும் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
2026-27 ஆம் ஆண்டிற்குள் இந்த மூன்று சதவீத செலவினக் குறைப்பு படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் கூறுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் 7 பில்லியன் டொலர்கள் சேமிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.
இந்த செலவினக் குறைப்புகளால் பொதுச் சேவையில் பணிநீக்கங்கள் அல்லது பணியாளர்கள் குறைப்பு ஆகியவை இருக்காது என நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார்.
மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.