December 12, 2024
தேசியம்
செய்திகள்

பயங்கரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது

பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் Montrealலில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

FBI வழங்கிய தகவலின் அடிப்படையில் RCMP யினால் வியாழக்கிழமை (23) இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

Montreal, St-Laurent borough பகுதியை சேர்ந்த 18 வயதான Mohamed Amine Assal என்பவரை அதிகாரிகள் கைது செய்ததாக RCMP தெரிவித்துள்ளது.

அவர் மீது இதுவரையிலும் எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை.

இந்த விசாரணை தொடர்பான மேலதிக ஆதாரங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என RCMP தெரிவித்துள்ளது.

இவரது சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை சீர்குலைத்து, பல நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒரு பயங்கரவாத அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட வைப்பதே தமது நடவடிக்கை எனவும் RCMP கூறுகிறது.

விசாரணைகள் தொடரும் நிலையில் , அவர் மீதான குற்றம் என்ன என்பதை RCMP விவரிக்கவில்லை.

Related posts

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

Lankathas Pathmanathan

சூரிய கிரகணத்தை காண Niagara Falls நகரில் 200 ஆயிரம் மக்கள் கூடினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment