வெளிநாடுகளில் உள்ள உக்ரைனியர்கள் இலவச அவசர நுழைவுச்சான்றிற்கு July நடுப்பகுதி வரை விண்ணப்பிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது.
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser புதன்கிழமை (22) இதனை அறிவித்தார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரகால திட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததை தொடர்ந்து இந்த அவசர கால திட்டம் அறிவிக்கப்பட்டது
கடந்த ஆண்டில் ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் வரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்
இந்த திட்டம் உக்ரேனியர்களை மூன்று ஆண்டுகள் வரை கனடாவில் தங்க அனுமதிக்கிறது.
தவிரவும் அவர்கள் இங்கு கல்வி கற்கவும் , தொழில் புரியவும் இந்த திட்டம் அனுமதிக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடா உறுதியுடன் உள்ளோம் என இந்த அறிவித்தல் குறித்து அமைச்சர் Sean Fraser கூறினார்
கனடிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை உக்ரேனிய கனடிய பேரவை வரவேற்றுள்ளது.