தேசியம்
செய்திகள்

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

2022 இல் மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

கனடாவின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டதாக கனடிய புள்ளி விவரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

January 1, 2022 முதல் January 1, 2023 வரை, கனடாவின் மக்கள் தொகை ஒரு மில்லியன் 50 ஆயிரத்து 110 பேரால்
அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (22) வெளியிட்ட மக்கள் தொகை மதிப்பீடுகளில் இந்த தரவு வெளியானது.

கனடாவின் வரலாற்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை அதிகரித்த முதல் 12 மாத காலப் பகுதி இதுவாகும் என அந்த அறிக்கை கூறுகிறது.

Related posts

நாடு திரும்பும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கனேடியர்கள் ?

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்கம் குறைந்தது!

Lankathas Pathmanathan

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment