தேசியம்
செய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் Karina Gould தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான சேவை நேரங்கள் தொற்றுக்கு முந்தைய தர நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் செவ்வாய்கிழமை (21) கூறினார்.

கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் செயலாக்கும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் Karina Gould தெரிவித்தார்.

இணையத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கும் புதிய வழிமுறையையும் அமைச்சர் செவ்வாயன்று அறிவித்தார்.

Related posts

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு

Lankathas Pathmanathan

Leave a Comment