அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் நிதி கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போம் என ஆளும் Liberal அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
2023 வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக முன்னுரிமைகளை நிதி அமைச்சர் Chrystia Freeland திங்கட்கிழமை (20) கோடிட்டுக் காட்டினார்.
சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து, கனடாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த வரவு செல்வது திட்டம் வழிவகுக்கும் என துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கூறினார்.
விலை உயர்வால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவ, வரவு செல்வது திட்டத்தில் பணவீக்க நிவாரணம் உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
COVID தொற்றுக்கு பிந்தைய கனடாவின் மிகக் குறைந்த வேலையற்றோர் விகிதத்தை நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கனடிய அரசாங்கம் எதிர்வரும் 28ஆம் திகதி வரவு செலவு திட்டத்தை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.