February 22, 2025
தேசியம்
செய்திகள்

Halifax உயர்நிலைப் பாடசாலையில் மூவர் மீது கத்தி குத்து

Nova Scotia மாகாணத்தின் Halifax பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மூவர் கத்தி குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Charles P. Allen உயர்நிலைப் பாடசாலையில் திங்கட்கிழமை (20) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்த குற்றச் சாட்டில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Halifax காவல்துறை கூறுகிறது.

காயமடைந்தவர்களில் இரண்டு பாடசாலை ஊழியர்களும் கைது செய்யப்பட்ட மாணவனும் அடங்குகின்றனர்.

காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைகள் தொடரும் நிலையில் திங்கள் முழுவதும் பாடசாலை மூடப்படும் என Halifax பிராந்திய கல்வி மையம் தெரிவித்தது.

 

Related posts

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்கள்- வெள்ளிக்கிழமை 2,923 தொற்றுக்கள் பதிவு!!!

Gaya Raja

Leave a Comment