துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு கனடா ஆதரவு திட்டங்களை அறிவிக்கிறது
நிலநடுக்கத்திற்குப் பின்னர் அதிகமான சிரிய, துருக்கிய குடியிருப்பாளர்களை கனடா ஏற்றுக்கொள்ளும் என குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார்.
துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதை கனடா எளிதாக்கும் என சனிக்கிழமை (18) அமைச்சர் Fraser அறிவித்தார்..
இந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எனவும் குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.