தேசியம்
செய்திகள்

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி $6 மில்லியன் இழப்பீடு வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்.

Liberal அரசாங்கம், பிரதமர் Justin Trudeau உட்பட 15 உயர் அதிகாரிகள் மீது இந்த இழப்பீடு வழக்கை Major General Dany Fortin தொடர்ந்துள்ளார்.

Ontario உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவதூறு, பொது அலுவலகத்தில் முறைகேடு, அலட்சிய விசாரணை, அந்தரங்க உண்மைகளை பகிரங்கமாக வெளிப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவாகியுள்ளன.

கனடிய அரசாங்கத்தின் COVID தடுப்பூசி திட்டத்தின் தலைவராக இருந்த Dany Fortin  பாலியல் வன்கொடுமை  குற்றச்சாட்டின் விசாரணை காரணமாக May மாதம் 2021ஆம் ஆண்டு பதவி நீக்கப்பட்டார்.

அவர் மீது August மாதம் 2021ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவானது.

இந்த குற்றச்சாட்டில் இருந்து கடந்த December மாதம் Dany Fortin விடுவிக்கப்பட்டார்.

Related posts

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR பரிசோதனை தேவை நீக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

Gaya Raja

பின்லாந்து, ஸ்வீடன் NATOவில் இணைவதற்கு முதல் நாடாக கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

Leave a Comment