உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவாக வெடி மருந்துகளையும் ஏவுகணைகளையும் கனடா அனுப்புகிறது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (15) ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது.
சுமார் 8 ஆயிரம் பீரங்கி வெடி மருந்துகளையும், 12 வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது.
கனடா, உக்ரைனுக்கு 1,800க்கும் மேற்பட்ட பயிற்சி வெடி மருந்துகளையும் வழங்கவுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து பிரதமர் Justin Trudeauவின் Liberal அரசாங்கம் $1 பில்லியன் இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.