தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் February மாதம் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் February மாதத்தில் வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது.

2018, 2019 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதை ஒப்பிடும் வகையில் கடந்த February மாத வீடு விற்பனை இருந்தது என கனடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது.

February 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சராசரி விற்பனை விலை 18.9 சதவீதம் சரிவை பதிவு செய்த நிலையில், வீடு விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Februaryயில் கனடாவில் சராசரி வீட்டு விலை 662 ஆயிரத்து 437 டொலர்கள் என கூறப்படுகிறது.

அதேவேளை January மாதத்துடன் ஒப்பிடுகையில், February மாதத்தில் வீடு விற்பனை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக Torontoவிலும் Vancouverரிலும்  வீடு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

McGill பல்கலைக்கழக முகாமை அகற்ற காவல்துறையிடம் முதல்வர் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment