விமானப் பயணிகளின் புகார்களின் விசாரணை குறித்த பெரும் பின்னடைவை சமாளிக்க உதவும் வகையில் 76 மில்லியன் டொலர் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra செவ்வாய்க்கிழமை (14) இந்த நிதி உதவியை அறிவித்தார்.
குளிர்கால விடுமுறையில் ஆயிரக்கணக்கான கனடியர்கள் தங்கள் பயணத் திட்டங்களில் தடைகளை எதிர்கொண்டனர்
இந்த நிலையில் விமான பயணிகள் உரிமைகள் மேலும் மாற்றங்களைச் செய்வதற்கு புதிய சட்ட மூலத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் Omar Alghabra கூறினார்
ஆனாலும் பயணிகள் எதிர்நோக்கும் சவால்களுக்கான முழு பொறுப்பையும் பிரதமர் Justin Trudeau ஏற்க வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.