தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

ஆளும் Liberal அரசாங்கமும் பிரதமர் Justin Trudeauவும், கடந்த பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களினால், நெருக்கடி நிலையினை எதிர் கொண்டுள்ளனர்.

இது குறித்து திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre, புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh ஆகியோர், வெளிநாட்டு தேர்தல் தலையீடுகள் குறித்த வெளிப்படையான விசாரணையை கோரியுள்ளனர்

எனினும் கனடாவின் பொதுத் தேர்தலில், சீனாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் மீதான பொது விசாரணையில், உயர் இரகசியத் தகவல்களை வெளியிடுவது குறித்த தனது கவலைகளையும் Jagmeet Singh வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த விசாரணையை ஆரம்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்களை பிரதமர் Justin Trudeau கோரியுள்ளார்.

இந்த நிலையில் கனேடியர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு அரசாங்கங்கள் எங்கள் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதை நம்புவதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவிக்கிறது.

இந்த விடையத்தில் புதிய சட்டங்கள் மூலமான சுயாதீன விசாரணையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக கடந்த பொது தேர்தலில், சீனாவும் ரஸ்யாவும் செல்வாக்கு செலுத்தியது குறித்து கனடியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் வெளிப்படையான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனாலும் கனேடிய தேர்தல்களில் வெளிநாடுகள் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இறுதியில் அவை தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லை என, பிரதமர் Justin Trudeau தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

Related posts

Ontario மாகாண சபை உறுப்பினரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

B.C. மாகாணத்தில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment