Quebec மாகாண வைத்தியசாலையின் அவசர பிரிவில் 86 வயதான மூதாட்டி மரணமடைத்தது குறித்து மாகாண சுகாதார அமைச்சர் அதிர்ச்சி வெளியிட்டார்.
Quebec நகருக்கு அருகே கடந்த வாரம் வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட 86 வயது Gilberte Gosselin மரணமடைந்தார்
இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சைக்கு அவர் Hôtel-Dieu வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இவரது மரணம் தொடர்பான விவரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என Quebec சுகாதார அமைச்சர் Christian Dubé கூறினார்.
இவர் உணவு அல்லது தண்ணீர் வழங்கப்படாமல் இறக்கும் நிலையில் இருந்தது சாதாரணமானது அல்ல. என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த மரணம் குறித்து பிராந்திய சுகாதார ஆணையத்திடம், Quebec சுகாதார அமைச்சர் விளக்கம் கோரியுள்ளார்.
இந்த மரணம் குறித்த சூழ்நிலைகளை விசாரிக்க ஒரு பிரேத பரிசோதனை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இடர் மேலாண்மைத் துறை, புகார்கள் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள் என உள்ளூர் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.