Alberta அரசாங்க வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Alberta மாகாண நிதி அமைச்சர் Travis Toews, 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாகாண வரவு செலவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் தாக்கல் செய்தார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான Alberta மாகாண அரசின் வரவு செலவு திட்டத்தின் மொத்தத் தொகை $68.3 பில்லியனாகும்.
May மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னர் இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் பெருமளவு முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
முதல்வர் Danielle Smith தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் வரவு செலவு திட்டம் இதுவாகும்.