தேசியம்
செய்திகள்

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை கனடாவின் உளவு நிறுவனம் CSIS எச்சரித்ததாக வெளியான செய்திகளை பிரதமர் Justin Trudeau மறுத்துள்ளார்.

இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Han Dong குறித்து கனடாவின் உளவு அமைப்பினால் அவரது அலுவலகம் எச்சரிக்கப்பட்டதாக கடந்த வாரம் வெளியான ஊடக அறிக்கையை பிரதமர் மறுத்தார்.

Han Dong ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என கூறிய பிரதமர், அவர் கனடாவுக்கு விசுவாசமாக இல்லை என்ற கருத்துக்களை மறுத்தார்.

Torontoவில் உள்ள Don Valley வடக்கு தொகுதியில் 2019ஆம் ஆண்டு முதலில் வெற்றிபெற்ற Han Dong, 2021 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சீனா உதவியது என்ற குற்றச்சாட்டு இனவெறியானது எனவும் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வராமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் CSIS உடன் இணைந்து செயல்படுகிறது என பிரதமர் கூறினார்.

Related posts

COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா?

Lankathas Pathmanathan

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan

Leave a Comment