Alberta மாகாணம் மத்திய அரசாங்கத்துடன் 24 பில்லியன் டொலர் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
Albertaவின் சுகாதார அமைச்சர் Jason Copping திங்கட்கிழமை (27) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவியில் கொள்கை அடிப்படையில் கையெழுத்திட்ட ஏழாவது மாகாணமாக Alberta மாறியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos திங்கள் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் Albertaவின் சுகாதாரப் பாதுகாப்புக்கு 24 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசாங்கம் ஆறு மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
நான்கு Atlantic மாகாணங்களுடனும், Manitoba, Ontarioவுடனும் கொள்கை அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தனது அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார்.