கடுமையான குளிர், பனிப்பொழிவு எச்சரிக்கைகள், உறைபனி மழை ஆகியவை கனடாவின் சில பகுதிகளில் திங்கட்கிழமையும் (27) தொடர்கிறது.
குறிப்பாக Ontario, Quebec, Atlantic கனடா ஆகிய பகுதிகளின் இன்றும் வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது.
பனிப்புயல் திங்கள் பிற்பகல் முதல் தெற்கு Ontarioவை தாக்க ஆரம்பித்துள்ளது.
தெற்கு Ontarioவின் பெரும் பகுதிகள் உறைபனி மழை, பனி பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
இந்த காலநிலை செவ்வாய்கிழமை Quebec, Maritimes நோக்கி பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Ontarioவில் எதிர்கொள்ளப்படும் அபாயகரமான பயண நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில், சுற்றுச்சூழல் கனடா தனது முன்னறிவிப்பை வார இறுதியில் ஒரு சிறப்பு வானிலை அறிக்கையிலிருந்து குளிர்கால வானிலை பயண ஆலோசனையாக மாற்றியது.
தெற்கு Quebecகின் சில பகுதிகள் பனிப்பொழிவு எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
Newfoundland and Labrador பகுதிகள் திங்கள் கடுமையான குளிர் எச்சரிக்கையில் உள்ளன.
இந்த பகுதிகளில் குளிர்நிலை – 46 டிகிரி செல்சியஸ் வரை திங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nunavut பிராந்தியத்தின் சில பகுதிகளில் குளிர்நிலை – 50 டிகிரி செல்சியஸ் வரை திங்களன்று எதிர்பார்க்கின்றன.
தவிரவும் British Columbiaவில் வார விடுமுறையில் கடுமையான பனிப்பொழிவு எதிர்கொள்ளப்பட்டது.
British Columbiaவின் சில பகுதிகளில் 11 முதல் 30 சென்டிமீட்டர் வரை பனி பொழிவு பதிவாகியுள்ளது.