Ontario அரசாங்கம் புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலம் ஒன்றை முன்வைத்தது.
சுகாதார அமைச்சர் Sylvia Jones செவ்வாய்க்கிழமை (21) மாலை இந்த சட்டமூலத்தை மாகாண சபையில் முன்வைத்தார்.
Ontario சட்டமன்ற அமர்வுகள் செவ்வாயன்று மீண்டும் ஆரம்பமாகின.
குளிர் கால இடைவேளையின் பின்னர் மாகாண சபை உறுப்பினர்க ள்செவ்வாய்க்கிழமை மீண்டும் சட்டமன்ற அமர்வுக்கு திரும்பினர்.
இம்முறை சட்டமன்ற அமர்வில் சுகாதாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சட்ட மூலம் முன்வைக்கப்பட்டது.