February 23, 2025
தேசியம்
செய்திகள்

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Haitiக்கான புதிய உதவிகளை பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (16) அறிவித்தார்.

இதில் மனிதாபிமான உதவிகளும், கண்காணிப்புக்கு உதவ சில கடற்படை கப்பல்களும் அடங்குகின்றன.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட Haitiக்கு கனடா புதிய மனிதாபிமான உதவியாக 12.3 மில்லியன் டொலர்களை வழங்கும் என வியாழனன்று Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் Justin Trudeau அறிவித்தார்.

தவிரவும் பிராந்தியத்தில் குடியேறுபவர்களுக்கு ஆதரவாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அலுவலகத்திற்கு 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கவுள்ளது.

Bahamasசில் நடைபெறும் Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக Justin Trudeau பங்கேற்கிறார்.

அங்கு Haitiயில் அதிகரித்து வரும் நெருக்கடி நிலை குறித்து Caribbean தலைவர்களுடன் கனடிய பிரதமர் உரையாடுகிறார்.

Related posts

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment