Toronto நகர சபை 2023 வரவு செலவு திட்டத்தை புதன்கிழமை இரவு இறுதி செய்தது
பல தசாப்தங்களில் மிகப்பெரிய சொத்து வரி அதிகரிப்பை உள்ளடக்கிய வரவு செலவு திட்டத்திற்கு Toronto நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது
5.5 சதவீத சொத்து வரி உயர்வுக்கு Toronto நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது
Toronto நகர முதல்வர் John Tory வடிவமைத்த 2023 வரவு செலவுத் திட்டம் புதன்கிழமை ஒரு சிறப்பு நகர சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் Toronto காவல்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, மிகப்பெரிய வரி அதிகரிப்பு ஆகியவற்றை அடக்குகிறது
Toronto $1.56 பில்லியன் துண்டு விழும் தொகையை எதிர்கொள்ளும் நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.