கனேடிய குடிமக்களாக மாறிய நிரந்தர குடியிருப்பாளர்களின் சதவீதம் குறைந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த சரிவு பதிவாகியுள்ளது என புள்ளிவிபர திணைக்கள தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
2001 முதல் குடியுரிமை அதிகரிப்பில் 40 சதவீதம் சரிவை புள்ளிவிபர திணைக்கள தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.
2021 ஆம் ஆண்டில், கனடாவில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகள் வாழ்ந்த நிரந்தர குடியிருப்பாளர்களில் 45.7 சதவீதம் பேர் குடியுரிமை பெற்றனர்.
இந்த எண்ணிக்கை 2016ல் 60 சதவீதமாகவும், 2001ல் 75.1 சதவீதமாகவும் இருந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.45 மில்லியன் நிரந்தர குடியிருப்பாளர்களை கனடாவுக்குள் அனுமதிப்பதன் மூலம் குடியேற்றத்தை அதிகரிக்க விரும்புவதாக கனடிய மத்திய அரசு கூறியுள்ளது.