தேசியம்
செய்திகள்

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

கனடாவை பயணத்திற்கு மிகவும் ஆபத்தான ஒரு நாடு என ரஷ்ய தூதர் தெரிவிக்கின்றார்.

ரஷ்யர்கள் மீது கனடா தொடர்ந்து தடைகளை விதித்து வருவதாக கனடாவுக்கான ரஷ்யாவின் தூதர் Oleg Stepanov கூறினார்.

இதன் காரணமாக கனடாவில் ரஷ்யர்கள் தொடர்ந்து இனவெறியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலா, கல்வி அல்லது வணிகத்திற்காக கனடாவை ரஷ்யர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன் என அவர் கூறினார்.

கனடாவின் தடை உக்ரேனில் தொடரும் மோதலுக்கு தன்னிச்சையான காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் Ottawa தூதரகம், Montreal, Toronto நகரங்களில் உள்ள அதன் தூதரகங்களுக்கு வெளியே நாளாந்தம் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் வருத்தம் அளிப்பவை எனவும் அவர் கூறினார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment