10 நாட்களில் கனடா, அமெரிக்கா வான்வெளியில் அடையாளம் காணப்படாத நான்கு பொருள்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரித்து வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
இதனை மிகவும் தீவிரமான சூழ்நிலையாகும் என பிரதமர் விவரித்தார்.
இந்த அசாதாரண நிலை குறித்து திங்கட்கிழமை (13) Yukon பிராந்தியத்தின் தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Trudeau கருத்து தெரிவித்தார்.
வார விடுமுறையில் Yukon பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத பொருளை மீட்பதற்கான தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் கனேடிய ஆயுதப் படைகள், RCMP அதிகாரிகளை திங்களன்று Trudeau சந்தித்தார்.
இது ஒரு சில இராணுவ விமானங்கள், முதற்குடித் தலைவர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் அசாதாரண பணியாகும் என Trudeau விவரித்தார்.
இராஜதந்திர, சர்வதேச தொடர்புகள் ஊடாக மேலும் தகவல்களைக் கண்டறியவும் தொடர்ந்து முயல்வதாக அவர் கூறினார்.
கனடாவில் வீழ்த்தப்பட்ட பொருட்கள் அல்லது அவற்றின் தோற்றம் குறித்த புதிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வழங்கவில்லை.
இந்த நிலையில் கனடாவின் இராணுவம் இதுபோன்ற தொடர் அச்சுறுத்தல்களை கையாள கூடிய நிலையில் உள்ளதா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.