கடந்த மாதம் கனடிய தொழில் சந்தையில் 150,000 அதிகமான புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) இந்த தகவலை வெளியிட்டது.
குறிப்பாக மொத்த, சில்லறை வர்த்தகங்களில் அதிக எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஊதியங்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் January மாதத்தில் 4.5 சதவீதம் அதிகரித்தன.
கனேடியப் பொருளாதாரம் புதிய தொழில் வாய்ப்புகளில் கடந்த September மாதத்தில் இருந்து மேல் நோக்கிய பாதையில் உள்ளது.
September மாதம் முதல் இதுவரையிலும் மொத்தம் 326,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.