தேசியம்
செய்திகள்

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.

துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கனடாவுக்கு வருவதற்கான விண்ணப்பங்களை விரைவாக செயல்முறை படுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் கடந்த திங்கட்கிழமை (06) துருக்கி, சிரியா ஆகிய நாடுகளை தாக்கின.

இதில் 20,000 பேர் வரை பலியாகியிருக்கலாம் எனவும், 65,000 பேர் வரை காயடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்க்கு மேலும் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முயற்சிப்பதாக அமைச்சர் Fraser கூறினார்.

நிலநடுக்கத்தின் பின்னரான நிலை குறித்து ஆராய துருக்கிக்கு இராணுவ மதிப்பீட்டுக் குழுவை புதன்கிழமை (08) கனடா அனுப்பியிருந்தது.

தவிரவும் துருக்கிக்கும், சிரியாவுக்கும் 10 மில்லியன் டொலர் நிதியுதவியை கனடா அறிவித்தது.

அதேவேளை செஞ்சிலுவை சங்கத்திற்கு கனேடியர்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு நிகராக 10 மில்லியன் டொலர் வரை மத்திய அரசாங்கம் வழங்கும் எனவும் பிரதமர் Justin Trudeau அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment