பிரதமரால் முன்வைக்கப்பட்ட புதிய சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த மாகாணங்களின் நிலைப்பாட்டை மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் மூலம் கோரவுள்ளார்.
இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos மாகாணங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.
.
மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்திருந்தார்.
இந்த திட்டம் குறித்த அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான கடிதத்தில் கோரப்படுகிறது.
மத்திய அரசின் இந்த புதிய நிதி உதவி குறித்து மாகாண முதல்வர்களிடையே மாறுபட்ட கருத்து வெளியாகிறது.
சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களில் மிகப் பெரிய பங்கை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்ற மாகாணங்களின் கோரிக்கையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யவில்லை.
பெரும்பாலான முதல்வர்கள் இந்த விடயத்தில் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டனர்.
ஆனால் புதிய நிதியுதவியை நிராகரிக்க முடியாத நிலையில் உள்ள மாகாணங்கள் அதனை ஏற்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க முதல்வர்கள் தனியாக சந்திப்பார்கள் என Manitoba முதல்வர் Heather Stefanson தெரிவித்தார்.