பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கும், சிரியாவுக்கும் $10 மில்லியன் நிதியுதவியை கனடா அறிவித்துள்ளது.
ஆரம்ப நிவாரண உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தலை சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan செவ்வாய்க்கிழமை (07) வெளியிட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கனடா தற்போது தேவைகளை மதிப்பிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கூடுதல் உதவிகளை வழங்குவதையும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும், சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் நாட்டின் பேரிடர் உதவி மீட்புக் குழுவை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் Sajjan கூறினார்.
திங்கட்கிழமை (06) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,200ஐத் தாண்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது