தேசியம்
செய்திகள்

10 வருட சுகாதார பாதுகாப்பு நிதி திட்டத்தை முன்மொழிய தயாராகும் மத்திய அரசு?

பிரதமருக்கும் மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை நடைபெறுகிறது.

சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கு பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

மாகாண, பிராந்திய அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் இதனை ஒரு வாய்ப்பாக கருதுவதாக பிரதமர் கூறினார்.

பிரதமர் Trudeau இந்த சந்திப்பில் ஒரு பில்லியன் டொலர்களை உள்ளடக்கும் திட்டமொன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் மத்திய அரசாங்கம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கு 10 வருட சுகாதார பாதுகாப்பு நிதி திட்டத்தை முன்மொழியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan

இந்த வாரத்துடன் 30 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

213,000 வேலைகளை இழந்த கனடிய பொருளாதாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment