February 22, 2025
தேசியம்
செய்திகள்

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

முன்னாள் CBC ஊடகவியளாளர் Toronto வீதியில் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

கடந்த வாரம் Torontoவில் தாக்குதலுக்கு உள்ளான நீண்டகால CBC வானொலி தயாரிப்பாளர் Michael Finlay மரணமடைந்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களால் Finlay செவ்வாய்க்கிழமை (31) இறந்ததாக CBC பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம், சந்தேக நபர் ஒருவர் Danforth வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, Finlayயை எதிர்கொண்டு அவரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் தாக்கப்பட்ட Finlay பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக புதன்கிழமை (01) காலை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

ஆனால் மேலதிக விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

31 வருடங்கள் CBCயில் பணியாற்றிய Finlay 2010ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்தத் தாக்குதலைக் ஒரு கொலைக் குற்றமாக காவல்துறையினர் இதுவரை குறிப்பிடவில்லை.

இந்த முடிவுக்கு முன்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஒருவரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

Related posts

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

NDPயின் மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment