தேசியம்
செய்திகள்

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Liberal அரசாங்கத்தின் எட்டு ஆண்டு ஆட்சி நாட்டை ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக Conservative கட்சி தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.

வெள்ளிக்கிழமை (27) தனது கட்சி உறுப்பினர்களுக்கான உரையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குற்றங்களின் அதிகரிப்பு, பணவீக்கம், விமான நிலையங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் என பல்வேறு விடையங்களில் பிரதமர் Justin Trudeau மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தனது தலைமையிலான அரசாங்கம், நாட்டை பொருளாதார விளிம்பில் இருந்து மீட்டெடுக்கும் எனவும் Poilievre தனது உரையில் தெரிவித்தார்.

ஆனாலும் Poilievre மக்களின் கோபத்தையும் கவலையையும் தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த முயற்சிப்பதாக Trudeau குற்றம் சாட்டினார் .

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் வெள்ளிக்கிழமை (27) உரையாற்றினார்.

Conservative கட்சி தலைவரிடம் உண்மையான தீர்வுகள் எதுவும் இல்லை என பிரதமர் Trudeau தனது உரையில் தெரிவித்தார்.

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல எனவும் Trudeau கூறினார்.

Related posts

Quebecக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

Lankathas Pathmanathan

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment