கனடிய முதன்மை வங்கிகள் தமது அடமான கடன் வட்டி விகிதங்களை 6.7 சதவீதமாக உயர்த்துகின்றன.
கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை எதிர்பார்ப்புக்கு அமைவாக புதன்கிழமை (25) உயர்த்தியது.
மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வாக 25 அடிப்படை புள்ளிகளை அறிவித்தது.
இதன் மூலம் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக உயர்ந்தது.
இந்த அறிவித்தலின் பின்னர் TD வங்கி, Scotia வங்கி, BMO, RBC, CIBC, National வங்கி ஆகியன தங்களது முதன்மை கடன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.7 சதவீதமாக உயர்த்தியது.
இது 2001ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் முதன்மை கடன் விகிதத்திற்கான மிக உயர்ந்த புள்ளியைக் குறிக்கிறது.