முந்தைய எதிர்பார்ப்புக்கு அமைவாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (25) உயர்த்தியது.
மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை புதனன்று அறிவித்தது.
வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக உயர்கிறது.