கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் புதன்கிழமை (25) மீண்டும் அதிகரிக்கிறது.
மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் 0.25 சதவீத வட்டி விகித உயர்வை பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாக அதிகரிக்கிறது.
இதன் மூலம் 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகூடிய அளவுக்கு உயரவுள்ளது.
கடந்த March மாதத்தில் இருந்து மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.