தேசியம்
செய்திகள்

பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்றக்கூடிய சட்ட மாற்றங்கள்

பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்ற ஆரம்பிக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

Ontario மாகாண முதல்வர் Doug Ford வியாழக்கிழமை (19) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Ford அரசாங்கம் February மாதம் இந்த சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

Ontario மாகாணத்தில் பணிபுரியும் முன்னர், சுகாதார பணியாளர்கள் Ontarioவின் சுகாதார ஒழுங்குமுறை கல்லூரிகளில் ஒன்றில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமுலில் உள்ளது.

ஆனாலும் அந்த விதிகளை தளர்த்த Ontario அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் சுலபமாக Ontarioவில் பணிபுரிவது சாத்தியமாகவுள்ளது.

தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான மூன்று படி திட்டத்தை அறிவித்த சில தினங்களில் Ontario மாகாண அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்

Lankathas Pathmanathan

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment