பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்க ரஷ்ய தூதரை கனடிய அரசாங்கம் அழைத்துள்ளது .
கடந்த சனிக்கிழமை (14) தென்கிழக்கு உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நிகழ்ந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர்.
இந்த தாக்குதலை வெறுக்கத்தக்கதும், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் என பிரதமர் Justin Trudeau கண்டித்திருந்தார்.
உக்ரேனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களை கண்டிக்க ரஷ்யாவின் தூதரை வரவழைப்பதாக வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.
அதேவேளை யுத்தம் குறித்த கனடாவின் ரஷ்ய தூதரின் யூத எதிர்ப்பு கருத்துக்களையும் கண்டிக்கவுள்ளதாக அமைச்சர் Joly தெரிவித்தார்.
உக்ரைனில் நடந்த கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தங்கள் குற்றங்களுக்கு பதிலளிப்பதை நாங்கள் உறுதி செய்வோம் எனவும் அவர் கூறினார்.
ரஷ்ய ஆட்சியை ஒருங்கிணைந்த பொருளாதாரத் தடைகள் மூலம் எதிர்க்க உள்ளதாகவும் அமைச்சர் Joly தெரிவித்தார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க கனடிய தூதர் கடந்த ஆண்டில் நான்கு முறை அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.