தேசியம்
செய்திகள்

மத்திய வரவு செலவுத் திட்டம் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை தீர்மானிக்கும்: NDP

NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை மத்திய வரவு செலவுத் திட்டம் தீர்மானிக்கும் என NDP கட்சியின் நிதி விமர்சகர் Daniel Blaikie தெரிவித்தார்.

வரவிருக்கும் 2023 வரவு செலவு திட்டம், Liberal அரசாங்கத்துடன் புதிய ஜனநாயக கட்சி செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என அவர் கூறினார்.

24 NDP நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்று நாள் சந்திப்பு புதன்கிழமை (18) ஆரம்பமானது.

புதன் காலை செய்தியாளர்களுக்கு ஒரு முக்கிய உரையுடன் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் Jagmeet Singh இந்த சந்திப்பை ஆரம்பித்தார்.

Liberal அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போரை தொடுத்துள்ளது என தனது உரையில் Singh கூறினார்.

உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்காக Liberal அரசாங்கத்துடன் தனது கட்சியின் ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை பிரதமர் நிராகரித்து வருவதாகவும் Singh குற்றம் சாட்டினார்.

பொது நிதியுதவி அளிக்கப்பட்ட ஆனால் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் சுகாதார சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் சில முதல்வர்கள் மருத்துவ சேவையை அகற்ற அனுமதித்ததாகவும் அவர் Trudeau மீது குற்றம் சாட்டினார்.

Related posts

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

Lankathas Pathmanathan

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment