December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (18) திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.

அங்கு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை அமைச்சர் ஆனந்த் அறிவித்தார்.

கனடாவில் தயாரான 200 கவச வாகனங்களை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்குவதாக ஆனந்த் கூறினார்.

கனடாவும் அதன் நட்பு நாடுகளும் கனமான உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையின் மத்தியில் அமைச்சர் ஆனந்த், இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

90 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த கவச வாகனங்கள் Mississauga, Ontarioவை தளமாக கொண்ட நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்படுகிறது.

கடந்த இலை துளிர் காலத்தில் உக்ரைனுக்கு இதே ரக கவச வாகனங்கள் எட்டு கனடாவினால் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த November மாதம் பிரதமர் Justin Trudeau அறிவித்த உக்ரைனுக்கான கூடுதல் 500 மில்லியன் டொலர் இராணுவ உதவியின் ஒரு பகுதியாக இது உள்ளது என அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.

தனது பயணத்தின் போது அமைச்சர் ஆனந்த், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார்.

உக்ரைனின் மிக முக்கியமான பாதுகாப்பு தேவைகள் குறித்து அறிந்து கொள்ளவும், உக்ரைனுக்கான கனடாவின் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தவும் இந்தப் பயணம் உதவியதாக ஆனந்த் ஒரு அறிக்கையில் கூறினார்.

2022ஆம் ஆண்டு February மாதம் முதல் கனடா 5 பில்லியன் டொலர் வரையிலான இராணுவ, நிதி, மனிதாபிமான உதவிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் Ontario அரசின் மசோதா

Lankathas Pathmanathan

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment