December 12, 2024
தேசியம்
செய்திகள்

B.C. நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் மரணம்

British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

British Colombia மாகாணத்தின் தென்கிழக்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்தில் திங்கட்கிழமை (16) மாலை நிகழ்ந்தது.

பலியானவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் பகிரப்படுத்தப்படவில்லை.

இரண்டு வாகனங்கள் மோதிய இந்த விபத்தில் இரண்டாவது வாகன சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடிய அணி தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment