மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த உரையாடல்களின் சாதகமான பெறுபேறுகள் விரைவில் வெளியாகக்கூடும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
இதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையே சுகாதார-பராமரிப்பு நிதியுதவி தொடர்பாக பல ஆண்டுகளாக நிலவி வரும் முறுகல் நிலை விரைவில் தீர்க்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
மாகாணங்கள் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் வரை, சுகாதார-பராமரிப்பு தொடர்பாக நிதி உதவியை வழங்க போவதில்லை என மாகாணங்களுடனான பேச்சுவார்த்தைகளில் Trudeau தெரிவித்திருந்தார்.
Quebec முதல்வர் போன்ற சில முதல்வர்கள் இந்த நிபந்தனைகள் யோசனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தனர்.
ஆனாலும் Ontario போன்ற சில மாகாணங்கள், நிபந்தனைகளை தாண்டியும் மத்திய அரசாங்கம் வழங்க தயாராக இருக்கும் தொகை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.